ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் சுதந்திர தின விழா இன்று(செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் தலைநகர் என்று சொல்லக்கூடிய டெல்லியில் பிரதமர் மோடி கோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல, சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்குபின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழக அரசு பள்ளிகள் தற்பொழுது தனியார் பள்ளிகளை போலவே மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு திர்ட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிக கவனம் ஈர்த்த திட்டம்தான் “காலை சிற்றுண்டி” திட்டம்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 1முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார். அதன்படி, வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு! பட்டதாரிகள் அனைவரும் அப்ளை பண்ணலாம்…!
- JIPMER புதுச்சேரியில் 10th, 12th, Diploma, M.Sc, MBBS படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 41300 மாச சம்பளமா வாங்கிடலாம்…!
- மாதம் 31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசாங்க வேலை! விருப்பமுள்ளவங்க வாக்-இன் இன்டர்வியூக்கு செல்ல ரெடி ஆகுங்க…!
- UPSC யில் வேலை செய்ய ஆர்வமா இருக்கீங்களா? இந்தியாவில் எந்த பகுதியிலும் வேலை பார்க்கலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!
- IRCON நிறுவனத்தில் மாதம் ரூ.218200 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உங்க ஈமெயில் அட்ரஸ்ல சுலபமா விண்ணப்பிக்கலாம்…!