மாணவர்களே இனி நீங்களும் ஸ்கூலுக்கு பேக் எடுத்துட்டு போக வேண்டாம்..! ஏன் தெரியுமா?

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமல்லாமல் அவர்களின் தனி திறமைகளை வெளிக்கொண்டு வரவும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், புதுச்சேரி அரசு மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்தவும் அவர்களின் தனி திறனை வளர்க்கவும் தற்பொழுது புதிய நடைமுறை கொண்டுவந்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மாதத்தின் கடைசி வேலை நாளை “நோ பேக் டே” அதாவது புத்தக பை இல்லாத நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

Students dont carry a bag to school anymore Do you know why read it now

இந்நிலையில், ஜூலை மாதத்தின் கடைசி நாளான இன்று புத்தக பை இல்லாத நாளாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அரசு உதவிபெறும் பள்ளிகலும் கடைபிடிக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றைய தினம் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் புத்தகப்பை கொண்டு வர வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு இன்றைய தினத்தில் கைவினை, வினாடி வினா, விளையாட்டு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM