தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கடும் எதிர்ப்பு! தமிழகத்திலே வெளியிடக்கூடாது…!

0
16
Cinema News

நாடு முழுவதும் புது படங்கள் வருகிறது என்றாலே பெரும்பாலும் அதனை நாம் வரவேற்கிறோம். ஏனென்றால் அதுவே நம்முடைய வாழ்க்கையில் ஒரு பொழுதுபோக்காக கருதப்படுகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் பெரும் சர்ச்சைக்குரிய படமாக உள்ளது. இத்திரைப்படமானது நாளை மறுநாள் திரையில் வெளியிடப்படப்போகிறது. ஆனால் இந்த படத்தை திரையில் வெளியிடக்கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

“தி கேரளா ஸ்டோரி” இந்த திரைப்படம் கேரளா மாநிலத்துக்கும், இஸ்லாமிய மத மக்களுக்கும் எதிராக கருத்துக்களை உண்டாக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தை திரையிட அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டிலே வெளியிடக்கூடாது என மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது.மேலும் “தி கேரளா ஸ்டோரி” படத்தை தமிழக தியேட்டரில் திரையிடாமல் இருப்பதே நல்லது என மாநில அரசுக்கு உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது. “தி கேரளா ஸ்டோரி” படத்தை திரையில் வெளியிடலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தலைமை செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர், ஆகியோருடன் முதலமைச்சர் ஆலோசித்து முடிவை வெளியிடுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here