புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்..!

0
106

தமிழ் வருடத்தின், 6-வது மாதமாக புரட்டாசி மாதம் உள்ளது. கன்னி ராசியில் சூரியன் இருக்கக்கூடிய நாட்களையே புரட்டாசி என்கிறோம்.

முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும், தெய்வங்களின் வழிபாடும் புரட்டாசி மாதத்தில் ஒன்றாக கிடைப்பதால்தான், இந்த மாதம் புனிதமான மாதமாக பார்க்கப்படுகிறது. இங்கு புரட்டாசி மாதத்தில் உள்ள சிறப்புகளை பற்றி பார்க்கலாம்.

புரட்டாசி மாத சிறப்புகள்

மகாளய பட்சம்:

1 9

புனித அமாவாசைகளுள், ஒன்றாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை விளங்குகிறது. மகாளய பட்சம் என்பது மேலுலகில் இருந்து மறைந்த நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து…

நம்மோடு 15 நாட்கள் தங்கிச் செல்லும் காலமாக பார்க்கப்படுகிறது. இந்த மகாளய பட்சம், புரட்டாசி அமாவாசைக்கு பதினைந்து நாட்கள் முன்பே வருவதாகும். மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது இந்தக் காலத்தில், சிறப்பு வாய்ந்ததாகும்.

அம்பிகைக்கும் உகந்த மாதம்:

2 9

மகாவிஷ்ணுக்கு உகந்த மாதமாக மட்டும் இல்லாமல், அவரின் சகோதரியான அம்பிகைக்கும் ஏற்ற மாதமாக புரட்டாசி மாதம் உள்ளது. இம்மாதத்தில் விநாயகப் பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் விரதங்கள் கடைப்பிடிக்கப்படும்.

புரட்டாசி மாதத்தில் வரும் ‘வர்ஷ ருது’:

6 ருதுகளாக ஒரு வருடம் பிரிக்கப்படுகிறது. தனங்களையும், தானங்களையும் வர்ஷ ருது அளிக்கக்கூடியதாகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ருது தான், ஆறு ருதுக்களில் முக்கியமானதாகும்.

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பானது:

பொதுவாகவே, சனிக்கிழமை விரதம் என்பது சிறப்பு வாய்ந்ததாக தான் இருக்கும். ஏனெனில் சனி பகவான் அவதரித்த நாளான சனிக்கிழமையில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பினை தரும். அதிலும், புரட்டாசியில் வரக்கூடிய சனிக்கிழமை விரதம் என்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

இம்மாதத்தில், சனிக்கிழமையில் விரதங்கள் மேற்கொண்டு பெருமாளை வழிபட்டால், பக்தர்களை சனி பகவானின் கெடு பலன்களில் இருந்து காப்பாற்றுவார் என்றும், அந்நேரத்தில் தீங்கு விளைவிக்கும் தனது சக்திகளை சனி பகவான் இழக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.

புரட்டாசி மாத நவராத்திரி:

3 10

சமஸ்கிருத மொழியில் நவ என்பதற்கு ஒன்பது என்றும், ராத்திரி என்பதற்கு இரவு என்றும் பொருள்படும். துர்கா நவராத்திரி என்று புராட்டசி நவராத்திரியை அழைப்பர். மேலும் இதுவே, நவராத்திரிகளில் மிக முக்கியமான நவராத்திரி என்றும் கருதப்படுகிறது.

பகவான் விஷ்ணுவின் மாதம்:

4 7

காக்கும் கடவுளாக பகவன் விஷ்ணு விளங்குகிறார். ஆகையால், இந்த புரட்டாசி மாதமானது பகவான் விஷ்ணுவின் மாதமாக பார்க்கப்படுகிறது. இம்மாதம் பெருமாளுக்கு உகந்ததாகவும் புனித மாதமாகவும் இருப்பதால், இம்மாதத்தில் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

புதன் கிரகத்துக்கு உரிய மாதம்:

5 8

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்துக்கு உரிய மாதமாக புரட்டாசி மாதம் காணப்படுகின்றது.

கேதார கௌரி விரதம்:

6 7

சிவனை நினைத்து, சக்திரூபமான பார்வதி தேவி வழிபட்டதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதம் என்பதாகும். ஈசனை வழிபடுகின்ற படியால் கேதாரேஸ்வரி விரதம் என்று அழைக்கப்படுகிறது.

வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதார கௌரி விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. மேலும் இவ்விரதத்தை அம்மன் விரதம், கௌரி காப்பு நோன்பு, லட்சுமி விரதம், கௌரி நோன்பு என்று பல்வேறு பெயர்களினால் அழைக்கப்படுகிறது.

இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்குரியது:

7 6

ஜேஷ்டா விரதம் மற்றும் தூர்வாஷ்டமி விரதம் ஆகிய இரண்டு விரதங்களும் புரட்டாசியில் வரும் விநாயகப் பெருமானுக்குரிய விரதங்களாகும். விநாயகப்பெருமானின் நல் ஆசியை, இவ்விரதங்களை அனுஷ்டிப்பது மூலமாக பெற முடியும்.

மஹாளய அமாவாசை:

8 4

மஹாளய அமாவாசை என்று புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை தான் அழைப்பார்கள். இந்த அமாவாசை, 2022-ஆம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை 25-ஆம் தேதி அன்று வருகின்றது.

மகாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் ஆரம்பித்து அமாவாசை வரை நீடிக்கின்றது. மகாளய பட்சத்தில், மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக ஒன்று சேரக் கூடும் காலம் எனக் கருதப்படுகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here