நம்மில் பலரும் மனதில் இன்பம் இல்லாமல் ஏதாவது ஒரு யோசனையோடு வாழ்கிறார்கள். குழப்பங்கள், சோர்வுகள், மன தளர்வுகள், மற்றவர்களுடைய பேச்சுகள் என ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்முடைய மனதில் நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறோம். இது நம்முடைய வாழ்க்கை… நாம் வாழ வேண்டிய வாழ்க்கை… இருப்பது ஒரு வாழ்க்கை தான். அதை எப்படி நம் மனதிற்கு பிடித்தவாறு வாழ வேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள். உங்களுக்காக நச்சுன்னு சில டிப்ஸ்..!
Tamil Motivational

1. நீங்கள் செய்ய நினைத்ததை உடனே செய்யுங்கள்
2. உங்களுடைய எதிகாலத்திற்கு தயாராகுங்கள்
3. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது வாய்விட்டு சிரியுங்கள்
4. தினம் ஒரு புதிய காரியத்தை அறிந்து கொள்ளுங்கள்
5. உங்களுக்கு பிடித்த நல்ல புத்தகங்களை படியுங்கள்
6. நம்பிக்கை மிக அவசியம், ஆனால் உன் பலம் அறிந்து அதன்மேல் நம்பிக்கை வை
7. தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்
8. உங்கள் அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள்
9. பிறரை மனதார பாராட்டுங்கள்
10. எதுவாக இருந்தாலும் மன்னிக்க பழகுங்கள்
11. பொறாமை, கோபம், பேராசை இவற்றை முற்றிலும் விலக்கி விடு
12. எந்த சூழ்நிலையிலும் துணிவாக செயல்படுங்கள்
13. எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என நினையுங்கள்
14. குழந்தைகளிடம் அன்பை மட்டுமே விதையுங்கள்.
15. எப்போதும் வெற்றி சாத்தியமல்ல என்பதை உணருங்கள்
16. சிறு சிறு தோல்விகள் அவசியம்
17. நல்ல நண்பர்கள் நமக்கு மிக அவசியம்
18. பிறரிடம் பேசும் போது… நல்லதையே பேச பழகுங்கள்
நல்ல சிந்தனைகளும், நல்ல செயல்களும் நம்மை எப்போதுமே மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.