Today Cinema News 2023
தமிழ் திரையுலகிலே முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரங்கூன் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்கே21’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
Also Read>> நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்
இப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ‘எஸ்கே21’ படத்தின் அறவிப்பு ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது என படக்குழுவானது தங்களது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.