சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்பட அப்டேட்! வெளியீடு தேதியில் மாற்றமா?

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்பட அப்டேட்! வெளியீடு தேதியில் மாற்றமா
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்பட அப்டேட்! வெளியீடு தேதியில் மாற்றமா

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அயலான்’. ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை ரூபனும் மேற்கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வித்தியாசமான (ஒரு விவசாயி /வேற்றுக்கிரகவாசி) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை தொடர்ந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, பானுப்பிரியா, பாலா சரவணன் மற்றும் பல பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் அக்டோபர் 2016-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, இதற்கான முதன்மை புகைப்படம் ஜூன் 2018லிருந்து ஜனவரி 2021 வரை எடுக்கப்பட்டது. இப்படத்தின் சில மறுபடப்பிடிப்புகள் நவம்பர் 2022-ல் இருந்தன. இந்தப் படத்தில் 4500க்கும் மேற்பட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. இதனால், ‘அயலான்’ திரைப்படம் இந்திய சினிமாவில் முதல் நீள லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளாக படப்பிடிப்பு தொடர்ந்து வரும் நிலையில், எப்பொழுது படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்துக்கொண்டு இருகின்றனர்.

சமீபத்தில் வெளியான ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவில், படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு டீசரை தயார் செய்து வருவதாகவும் அதை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் தகவல் வெளியானது. ஆனால் படப்பிடிப்பின் வேலைகள் இன்னும் நிறைவுபெறாத நிலையில், மீண்டும் இத்திரைப்படம் வெளிவரும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் வருகின்ற 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.