சிவக்கார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
16
Maveeran Release Date Announcement

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் மிஸ்கின் வில்லனாகவும், தெலுங்கு நடிகர் சுனில், சரிதா மற்றும் பல நடிகர்கள் அவர்களுக்கான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ளார்.

இப்படத்தில் சீன் ஆ சீன் ஆ என்ற பாடல் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்துள்ளது. அதோடு குடும்பமாக சேர்ந்து பார்க்கும் படமாக எடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

மாவீரன் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். வித்து அய்யன்னா என்பர் இந்த படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த படத்தை திரையரங்குகளில் ஆகஸ்டு மாதம் 11ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரன் படமானது இதுவரை நான் செய்யாத புதிய கதைக்களம். இந்த கதைக்களத்திற்கு ஏற்றவாறு ஷுட்டிங் செய்வதற்கு நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது என்றார் சிவக்கார்த்திகேயன்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here