சிவகார்த்திக்கேயனின் அயலான் பட டிரைலர் வெளியிட்டாங்க! பாத்து என்ஜாய் பண்ணுங்க..! #AyalaanTrailer #Sivakarthikeyan

மக்கள் அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்க செய்துள்ள படம் தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம். ஆர்.ரவிக்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து அட்டகாசமாக உருவாகியுள்ளது பாடல்கள். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்கள்.

AyalaanFromPongal

24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சிவகார்த்திக்கேயன் பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள படங்களிலேயே அதிக நாடுகள் மற்றும் திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் அயலான் திரைப்படம் தான் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Sivakarthikeyan Ayalaan

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடம் (2024) பொங்கலுக்கு ‘அயலான்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி விட்டது. பார்த்து என்ஜாய் பண்ணுங்க மக்களே!

அயலான் டிரைலர்
Scroll to Top