டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) எக்ஸாம் எழுத விடலையா? கேட்டை உடைச்சிட்டு உள்ள போன தேர்வர்கள்..!

0
23
shocking news TNPSC Can't Write Exam Candidates who have broken the gate..! more and full details here

நேற்றைய தினத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஊரக வளாச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வவாளர் பணிக்கென எழுத்து தேர்வு காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. இந்த தேர்வானது நேற்று காலையில் ஒரு தேர்வும் பிற்பகலில் ஒரு தேர்வு நடைபெறும் எனும் நிலையில், தேர்வு எழுத போகும் தேர்வர்களுக்கு நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது.

சாலை ஆய்வவாளர் பதவிக்கான ஒரு தேர்வு காலையில் முடிந்த பின், இரண்டாவது ஒரு தேர்வு மதியம் 2 மணிக்கு நடக்க இருந்தது. TNPSCயின் விதிமுறைகளில் முக்கியமானது என்னவென்றால், தேவுக்கு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்னாடியே வர வேண்டும்.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு நடக்கவேண்டிய தேர்வுக்கு 1.30 மணி அளவில் தேர்வு மையத்தின் கதவுகள் மூடப்பட்டது. இதனால் தாமதமாக வந்த 50 க்கும் மேற்ப்பட்ட தேர்வர்கள் தங்களை உள்ளே விடுமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதனை தொடந்து சிறிது நேரத்திலே சாலை மறியலில் ஈடுபட்டுவிட்டனர்.

தேர்வர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்நிலையில் திடீரென தேர்வர்கள் நுழைவுவாயின் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போய் தங்கது தேர்வை எழுத தொடங்கினர். குறைந்த அளவு போலீசாரே இருந்ததால் தேர்வர்களை தடுக்க முடியாத நிலை ஏற்ப்பட்டு விட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர் உடனடியாக தேர்வு நடைபெறும் மையத்திற்கே வந்தார். போலீசார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அவர்களது தலைமையில் குவிக்கப்பட்டு நுழைவு வாயின் கேட்டை உடைத்து உள்ளே சென்று தேர்வு எழுதியவர்களிடம் விசாரைனையை மேற்கொண்டார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here