
உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன் பிரபல நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் மதிப்பில் வாங்கியுள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த 50 சதவீதம் பேரை பணி நீக்கம் மற்றும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு கட்டணம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு 2020 ஆம் ஆண்டு முடக்கப்பட்டது.
இந்நிலையில், டொனால்டு டிரம்பின் பேச்சால் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் இவரின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் அவரது கணக்குக்கு நிரந்தர தடை விதித்தது.
இதனை தொடர்ந்து, தற்பொழுது டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் டிரம்பின் டுவிட்டர் கணக்கை மீண்டும் அனுமத்திக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பை எலான் மஸ்க் டுவிட்டர் பக்கத்தில் நடத்தினார். இதில் 51 சதவீதம் பேர் டிரம்பின் டுவிட்டர் கணக்கை மீண்டும் அனுமதிக்கலாம் என்று தெரிவித்த நிலையில் டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது.
RECENT POSTS
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023