டுவிட்டர் பற்றி எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி…! இனி இந்த சேவை செயல்படாதா?

0
51

உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன் பிரபல நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் மதிப்பில் வாங்கியுள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த 50 சதவீதம் பேரை பணி நீக்கம் மற்றும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு கட்டணம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் ‘ப்ளூ டிக்’ வசதி என்பது பிரலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வைத்திருக்கும் டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரபூர்வ கணக்குதான் என்பதை உறுதிபடுத்தி சொல்வதற்காககொடு டுவிட்டர் நிறுவனம் இந்த ‘ப்ளூ டிக்’ வசதி அவர்களுக்கு கொடுத்துள்ளது.

இந்நிலையில், எலான் மஸ்க் இந்த ப்ளூ டிக் வசதிக்காக கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் அதற்கான அதிரடி அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த அறிவிப்பில், இனி இந்த ‘ப்ளூ டிக்’ வசதியை பயன்படுத்தும் அனைவரும் மாதம் 7.99 அமெரிக்கன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 719 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ஒவ்வொறு நிறுவனத்துக்கும் வெவ்வேறு அடையாள நிறங்களை கொண்ட ப்ளூ டிக் சேவை வழங்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here