ஷாக் நியூஸ்! மின் கட்டணம் உயர்ந்து விட்டது… தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு! இன்று முதல் அமல்!

0
115

புதிய மின் கட்டண உயர்வு பற்றி, பொதுமக்களிடம் கருத்து கேட்ட நிலையில் இன்று அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது!

அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன் படி, 100 யூனிட் வரையிலான விலையில்லாத மின்சாரம் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், இவர் கூறுகையில் 2 மாதங்களுக்கு மொத்தமாக,

  • 200 யூனிட் வரை – பயன்படுத்தும், 26.73 சதவீத (அதாவது 63.35 லட்சம்) வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு – ரூ.27.50-ம்,
  • 300 யூனிட்டுகள் வரை – மின் நுகர்வு செய்யும், 15.30 சதவீத (அதாவது 36.25 லட்சம்) வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு – ரூ.72.50-ம்,
  • 400 யூனிட்டுகள் வரை – மின் நுகர்வு செய்யும், 7.94 சதவீத (அதாவது 18.82 லட்சம்) வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு – ரூ.147.50-ம்,
  • 500 யூனிட்டுகள் வரை – மின் நுகர்வு செய்யும், 4.46 சதவீத (அதாவது 10.56 லட்சம்) வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு – ரூ.297.50-ம்,
  • 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும், 1.32 சதவீத (அதாவது 3.14 லட்சம்) வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றுக்கு – ரூ.155-ம் மட்டுமே கட்டணத்தை உயர்த்துவதாகவும் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here