கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த இயக்குனர் ஷங்கர்..! வைரலாகும் ‘இந்தியன் 2’ படத்தின் போஸ்டர்…

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்ற பெயருக்கு பெருமைக்குரியவராக நடிகர் கமல்ஹாசன் உள்ளார். இவர் குழந்தையாக இருக்கும்போதே சினிமா உலகிற்கு வந்தவர். தமிழ் சினிமா உலகில் இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு படங்களிலும் தனது மாறுப்பட்ட நடிப்பை வெளிகாட்டுவார். இவர் தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் இந்தியன் படம் வெளியானது. இந்த படம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு கமல் ரசிகர்களுக்கு இயக்குனர் ஷங்கர் ஒரு சர்பரைஸ் காட்சியை வெளியிட்டுள்ளார். அதன்படி, “இந்தியன் 2” படத்தில் கமல் நடித்த ஒரு புகைப்படத்தை இயக்குநர் சங்கர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த படம் தற்பொழுது இறுதிகட்டத்தை நெருங்கி வருவதால இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM