இரவோடு இரவாக அட்லீ வீட்டுகே போன ஷாருக்கான்… என்னாச்சு…

0
13
Shah Rukh Khan who went to Atlee's house overnight what about jawan teaser

தெறி, மெர்சல், பிகில், ராஜா ராணி போன்ற திரைப்படங்களை இயக்கி மக்களை ஈர்த்தவர் இயக்குனர் அட்லீ. இவர் கோலிவுட்டில் இருந்து தற்போது பாலிவுட்டில் பிசியாக மாறிவிட்டார். கடந்த 4 வருடங்களாக ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துல நயன்தார, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை ஜூன் 2ஆம் தேதி அன்று வெளியிடலாம் என்று இருந்தது. ஆனால் இந்த படத்திற்க்கான போஸ்ட் புரொடக்‌ஷன், கிராபிக்ஸ் வேலை ஏதும் முடிக்கவில்லை என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஜவான் படத்தை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திரியில் வெளியிட ஷாருக்கான் முடிவு செய்திருந்தார். டீசர் வெளியிடும்போது அறிவிப்பு தேதியும் வெளியிடலாம் என அட்லீ சொன்னதால், ஷாருக்கானும் அதனை ஏற்றுக்கொண்டார்.

அப்படி இருந்தும், டீசரை கூட அட்லீ ரெடி பண்ணவில்லையாம். இதனால் டென்ஷனான ஷாருக்கான் நடு ராத்திரியிலே அட்லீ வீட்டுக்கே போய்ட்டார். ஏன் டீசர் வெளியாகவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு அன்றிரவு அங்கேயே தங்கி விட்டார். இதனால் உடனடியாக ஜவான் டீசர் வெளியாகும். அதன் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

மேலும் டீசரின் ரன்னிங் டைம் 1.54 இருக்கும் என சில தினங்களுக்கு முன்னாடியே லீக் ஆகி இருந்தன. இந்த படத்திற்கு U/A சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here