Latest World News 2023

ரஷ்யா – உக்ரைன் போர் ஏற்ப்பட்டதால் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் வெளியேறியுள்ளன. இதனால் அந்த பெரிய நிறுவனகள் நஷ்டத்தில் இருந்தது. இந்நிலையில், பிரபலமான பீர் கம்பெனியான ஹெனிகேனும் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.
ஹெனிகேன் என்னும் நிறுவனம் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மிக பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனம் பல வருடங்களாக ரஷ்யாவில் பீர் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தது. ஹெனிகேன் நிறுவனம் ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்னெஸ்ட் குழுமத்திடம் தங்களது ஆலைகளை விற்றுவிட்டு ரஷ்யாவை விட்டு வெளியேறினது. இந்த நிறுவனத்தில் சுமார் 1,800 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மேலும், ஹெனிகேனுக்கு சொந்தமாக ரஷ்யாவில் ஏழு ஆலைகள் உள்ளன.
ஹெனிகேன் நிறுவனத்தை ஏழு தொழிற்சாலைகளையும் வெறும் 1 யூரோவுக்கு விற்பனை செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் வெறும் 90 ரூபாய்க்கு ஏழு தொழிற்சாலைகளையும் ஆர்னெஸ்ட் குழுமத்திடம் விற்பனை செய்துவிட்டது. ஒரு கேன் பீரின் விலையை விட தங்களது நிவனத்தை விற்பனை செய்தது தான் மிகவும் கவலையான விஷயம்.
ஹெனிகேனுக்கு சொந்தமான ஏழு தொழிற்சாலைகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா உங்களுக்கு? சுமார் 2,685 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்பை வெறும் 90 ரூபாய்க்கு விற்பைனை செய்துள்ளது. அந்த அளவுக்கு ஹெனிகேன் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.