திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகையின் மறைவுக்கு சீமான் இரங்கல்!

0
84

சீமான் விடுத்த இரங்கலில் “கபிலனை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித் தவிக்கிறேன்” என்று தெரித்துள்ளார்!

திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை. இவருக்கு 28 வயதாகிறது. இவர் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து கட்டுரைகளை, முன்னணி ஆங்கில ஊடகத்தில் தூரிகை எழுதி வந்துள்ளார்.

எழுத்தாளராக மட்டுமில்லாமல் தூரிகை, இணைய இதழை ஒன்றையும் தொடங்கி, நடத்தி வந்துள்ளார். அந்த இணைய இதழின் பெயர், “பீயிங் வுமன்” (Being Women) என்பதாகும். இதுமட்டுமின்றி இவர், பல்வேறு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவரது தற்கொலை, எழுத்தாளர்கள் மற்றும் சினிமா துறையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘நாம் தமிழர் கட்சி’-இன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில்,

“புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன்.

தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித் தவிக்கிறேன்.

கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்”

என்று ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்’ இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here