வைகை புயல் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் திரைவிமர்சனம்!

0
38

கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த வைகை புயல் வடிவேலு, கடந்த ஆண்டு தான் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ரீ-எண்ட்ரியை அறிவித்த பின் அவர் முதன்முதலில் நடிக்க கமிட் ஆன படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் வடிவேலு.

வைகை புயல் வடிவேலு நடித்திருக்கும் இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனீஸ் காந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுள்ளது. வடிவேலு நடித்த இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை பற்றி டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த படத்தில், வடிவேலு நாய்களை திருடி விற்பனை செய்பவராக இருப்பார். இந்நிலையில், அவருடைய வீட்டில் இருந்த ராசியான நாய் காணாமல் போய்விடும். அதன்பின் அந்த நாயை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பததுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில், முகபாவனையாலும் படத்தை மெருகேற்றிவிடலாம் என்று நினைத்துள்ளார்கள். இந்தப் படம் முழுவதும் வடிவேலுவின் குரல் கேட்டுகொண்டே இருக்கிறது. ஆனால் இது சிரிக்க வைக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் ரசிகர்கள் சொல்கின்றனர்.

மேலும், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு வடிவேலுவின் நகைச்சுவையை எதிர்பார்த்தே திரைக்கு ரசிகர்கள் வருவார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான். எத்தனையோ பெயர் தெரியாத படங்களுக்கு வடிவேலுவின் காமெடிகள் அட்ரஸாக இருந்துள்ளன. ஆனால் வடிவேலு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நகைச்சுவையே இல்லாமல் போனது வருத்தம்தான் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here