திருப்பதியில் இலவச டோக்கன் மூலம் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம்! எப்படி தெரியுமா?

0
48

ஆந்திர மாநிலத்தில் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவில் உலகத்தின் பணக்கார கோவில்களில் ஒன்றாக கூறப்படுகிறது. திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். இந்நிலையில் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகிறனர்.

அந்த வகையில், மாதந்தோறும் திருப்பதி எழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இலவச தரிசன டிக்கெட் பெறுபவர்கள் குறைந்தபட்சம் 48 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். அதிலும், ஆன்லைன் தரிசனம் டிக்கெட் ரூ.300 கொடுத்து வாங்குபவர்கள் சுமார் 5 மணி நேரத்திலேயே தரிசனம் செய்து வருகினறனர்.

இந்நிலையில், பக்தர்களின் இத்தகைய சிரமத்தை போக்க இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டு வரப்பட்டது. அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள கோதண்டராமசாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் டைம்ஸ் லாக் டோக்கன் வழங்கி வருகின்றனர். தற்பொழுது பனிபொழிவு காரணமாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்கின்றனர். டோக்கன் வாங்காமல் நேரடியாக செல்லும் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here