மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை… உங்கள் வீடு தேடி வரும் விண்ணப்பங்கள்!! அரசின் அதிரடி நடவடிக்கை!

Rs.1000 per month entitlement for daughter Applications are coming for your house Government action get full details read now

மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு இந்த உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணபிக்க பயனாளர்களின் வயது 21 நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ள நிலையில், தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணபிக்கும் விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்ப பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று விண்ணப்பம் வழங்க வேண்டும் என்று நியாய விலை கடை ஊழியர்களிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வின்னப்பதிவு முகாம்கள் காலை 9.30 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM