நீங்க தினமும் ரயில்ல போறீங்களா? இனிமே இந்த நேரத்துக்கு போங்க… ரயில்வே வாரியத்தின் புதிய அறிவிப்பு!

தமிழகத்தின் முக்கிய மற்றும் பிஷியாக இருக்கக்கூடிய ஒரு பகுதியாக சென்னை உள்ளது. சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கும் அதிகப்படியான மக்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் சென்னையிலிருந்து இயக்கப்படும் சோழன், குருவாயூர் ஆகிய ரயில்களின் நேரத்தை மாற்றியுள்ளது. மாற்றப்பட்ட ரயில்களின் நேரமானது வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலானது சென்னை எலும்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 7.15 மணிக்கு புறப்பட்ட நிலையில், வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு திருச்சியில் 2.30 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Residents of Chennai are you also going on this train Now go to this time Railway Boards new notification read it now

மேலும், திருச்சியிலிருந்து கிளம்பும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலானது காலை 10.15 மணிக்கு பதிலாக 11 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM