ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
15
Entertainment News

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டாலும் சின்ன குழந்தைகளும் சொல்லும்… அட நம்ம ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உள்ள ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன், மலையாள நடிகரான மோகன்லால், கன்னட நடிகரான சிவராஜ்குமார் போன்ற நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருக்கிறார். ஆகமொத்தம் இந்த படம் அதிரடி சண்டை காட்சிகளுடன் அமைந்துள்ளது. இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன என தகவல் வெளியாகியிள்ளது.

இந்நிலையில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. எப்போதென்றால், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அன்று திரையில் வெளியிடப்படும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழுவானது அறிவித்துள்ளது. ஆகவே இத்திரைப்படத்தை சந்தோசமாக தியேட்டரில் சென்று பார்த்து மகிழவும்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here