பொங்கி எழும் கடல் சீற்றம்..! மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம்!

0
35

சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மனல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை கடந்த 27ம் தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

இதையடுத்து, மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, மாற்றுத்திறனாளிக்கான பாதையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சேதமடைந்த சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here