Ragi Sweet Kolukattai in Tamil
ராகி இனிப்பு கொழுக்கட்டை, அனைத்து குழந்தைகளும் விரும்பி உண்ண கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும். இது குழந்தைகளுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி ஆரோகியம் மேம்படவும் உறுதுணையாக உள்ளது. மக்கள், விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு படைக்கப்படும் ஒரு இனிப்பு வகையாகவும் உள்ளது.
விநாயகருக்கு பிடித்தமான உணவு வகைகளில் கொழுக்கட்டையும் ஒன்றாகும். இதை விநாயகருக்கு படைத்து, மக்கள் விநாயகரை வழிபடுகின்றனர். அத்தகைய ராகி இனிப்பு கொழுக்கட்டை எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வருகின்ற விநாயகர் சதுர்த்தியின் போது நீங்களும் ராகி இனிப்பு கொழுக்கட்டை செய்து, இறைவனுக்கு படைத்தும் சுவைத்தும் மகிழுங்கள்.
சத்தான ராகி இனிப்பு கொழுக்கட்டை ரெடி!

Ganesh Chaturthi Recipe in Tamil
தேவையான பொருட்கள் :
அவல் – 1 கப்
கேழ்வரகு மாவு – 1 கப்
ஏலக்காய் – 3
வெல்லம் – 1 கப்
தேங்காய் – 1 கப்
தண்ணீர் – 3/4 கப்
குறிப்புகள் :
- கொழுக்கட்டை செய்வதற்கு கடையில் கிடைக்கும் கேழ்வரகு மாவு அல்லது வீட்டில் தயாரிக்கபட்ட கேழ்வரகு மாவு பயன்படுத்தலாம்.
- சிவப்பு அவல் பயன்படுத்துவது, கொழுக்கட்டைக்கு கூடுதல் சுவை தரும்.
- வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கூட கொழுக்கட்டையை செய்யலாம்.
- துருவிய தேங்காய் அல்லது சிறு சிறு துண்டுகளாக வெட்டிய தேங்காயை பயன்படுத்தலாம்.
- கொழுக்கட்டையை பிடிக்கும் பொழுது கையில் நெய் அல்லது எண்ணெய் தடவி கொள்ளவும்.
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் 1 கப் சிவப்பு அவல், 3 ஏலக்காய் மற்றும் 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளவும் .
- இவை அனைத்தையும் மிக்சியில் கொரகொரவென அரைத்து எடுத்து கொள்ளவும்.
- மற்றொரு பாத்திரத்தில் 1 1/2 கப் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- வெல்லம் கரைந்து வந்தவுடன், வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- எடுத்து வைத்த வெல்ல கரைசலை, அரைத்த கலவையுடன் சேர்க்கவும்.
- பிறகு, அதில் கேழ்வரகு மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை, நம் கைகளால் சிறு சிறு உறண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
- பிறகு பிடித்த கொழுக்கட்டைகளை ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் வைக்கவும்.
- ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்தவுடன் இட்லி தட்டில், பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை எடுத்து வைத்து இட்லி பாத்திரத்தை மூடவும்.
- 7-8 நிமிடம் இட்லி பாத்திரத்தில் உள்ள கொழுகட்டைகளை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- இப்பொழுது அனைவரும் விரும்பி உண்ண கூடிய மிகவும் சுவையான ராகி இனிப்பு கொழுக்கட்டை தயார்.