ராகவா லாரன்ஸ் நடிக்கும் “சந்திரமுகி 2” படத்தின் புதிய அப்டேட்..! ஓ அப்போ இதுக்குதான் வெயிட்டிங்கா…

கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானப்படம் “சந்திரமுகி”. இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதால் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது தாயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், “சந்திரமுகி 2” படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில், “சந்திரமுகி 2” படம் வருகிற விநாயக சதுர்த்தியில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கடந்த மாதம் முதலே இப்படத்தின் அப்டேட்டை படக்குழு அவ்வபோது வெளியிட்டு வருகிறது. முதலில் “சந்திரமுகி 2” படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த போஸ்ட் வெளியானது. இதில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இந்நிலையில், தற்பொழுது மீண்டும் ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தனது டிவிட்டர் பக்கத்தில், படத்திற்கான இசைப்பணிகள் முடிந்துள்ளதால் மீதமுள்ள 9 பாடல்களை வெளியிடுவதில் ஆவலுடன் இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இந்த அப்டேட்டானது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM