கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் அள்ளி குவித்தது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை இந்த படத்தின் இன்னொரு பலமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், புஷ்பா படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் தற்பொழுது புஷ்பா படத்தின் இரண்டாம்பாகம் உருவாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு நடைபெற்ற தேசிய விருது விழாவில் இவர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அப்போதிலிருந்து ட்ரெண்டிங்கில் இருந்து வரும், அல்லு அர்ஜுன் தற்போது வரவிருக்கும் பிளாக்பஸ்டர், ‘புஷ்பா 2: தி ரூல்’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
Also Read : இனிமே நாங்க ரொம்ப பிஸி..! இந்திய அணி விளையாடும் அடுத்தடுத்த ஆட்டத்தின் பட்டியல் வெளியீடு!!
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனின் இரண்டாவது லுக் போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா ராஜ்’ கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமாக இருப்பது போல் தெரிகிறது. ஸ்டலிஷ் உடை மற்றும் கரடுமுரடான தாடியுடன், அவர் லாரி முன் நின்று கொண்டிருக்கும் படி காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.