பைபிள் என்பது கிறிஸ்தவர்களின் புனித நூல். அறுபத்தாறு புத்தகங்களைமட்டும் தன்னகத்தே கொண்டு தேவனுடைய வெளிப்பாட்டின் எழுத்து வடிவமாக விளங்குவதே பரிசுத்த வேதாகமம். பைபிள் வாக்குத்தத்த வசனங்களை இங்கு காணலாம்.
Promise Bible Verse in Tamil

உன்னை அதிசயங்களை காணப் பண்ணுவேன்.
மீகா 7:15
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:18
நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்.
எரேமியா 30:17
நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்.
ஆதியாகமம் 15:1
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்துபோம். ஏசாயா 60:20
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.
யாத்திராகமம் 14:14
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை.
யோசுவா 1:5
உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பேன்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
சங்கீதம் 81:16
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசிர்வதிப்பார். நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வை காண்பாய்.
சங்கீதம் 128:5
கர்த்தர் உன்னை எல்லா தீங்கிற்கும் விலக்கி காப்பார். அவர் உன் ஆத்துமாவை காப்பார்.
சங்கீதம் 121:7
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன்.
எபிரெயர் 6:14
எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
ஏசாயா 60:1
நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசிர்வதித்து, உன் பேரைப் பெருமைபடுத்துவேன். நீ ஆசிவாதமாய் இருப்பாய்.
ஆதியாகமம் 12:2
கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
உபாகமம் 28:14
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
ஏசாயா 60:20