ஜனாதிபதி மாளிகை – பொதுமக்களுக்கு இன்று முதல் பார்வையிட அனுமதி இல்லை!

Today News 2023

Today News 2023

வளர்ந்த மற்றும் வளரும் 20 நாடுகளின் கூட்டமைப்பாக இருக்கும் ஜி20 என்ற அமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரமாண்டமாக வருகிற செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இதில், ஜி20 நாடுகளின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 30 நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த தலைவர்கள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள போவதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு பக்கம் இந்த மாநாடு ஏற்ப்பாடுகளுக்கு டெல்லி அரசும், மத்திய அரசும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

Also Read >> வந்தது குட் நியூஸ்! மீண்டும் கியாஸ் சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு! எவ்வளவுனு தெரியுமா?

இந்நிலையில், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு இன்று (செப்டம்பர் 1) முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரைக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என குடியரசு தலைவர் இல்லம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வழக்கம் போல அனுமதி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.