மத்திய அரசு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்காவே பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது கர்ப்பிணி பெண்களின் நலனுக்காகவே இத்திட்டம் தொடங்கியுள்ளது. இதன்மூலம் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ரூ.5000 வழங்கப்படும். இந்த தொகையானது கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் யாரோ அவர்களது வங்கி அக்கவுண்டில் டைரக்டா டெப்பாசிட் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணத்தை மூன்று தவணை முறையாகவே பெற முடியும். எப்படியெனில், கர்ப்பத்தை உறுதி செய்து அருகாமையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கர்ப்பத்தை பதிவு செய்யும் போது 1000 ரூபாய் முதல் தவணையாக கொடுக்கப்படும். அடுத்து ஆறும் மாசம் கர்ப்பத்திற்கு பிறகு அதாவது ஒரு கர்ப்பகால பரிசோதனைக்கு பின் 2000 ரூபாய் இரண்டாவது தவணையாக கொடுக்கப்படும். மூன்றாவது தவணை 1000 ரூபாய் குழந்தை பிறந்து பதிவு செய்தபின் இத்தொகை வழங்கப்படும்.
இந்த உதவி தொகையானது, பொருளாதாரம் ரீதியாக நலிவடைந்த பெண்கள் மற்றும் தினக்கூலியாக வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே இந்த 5000 ரூபாய் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!