போட்றா வெடிய… லியோ படத்தின் புதிய சாதனை..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

தமிழ் நாட்டில் இளைய தளபதி விஜய் என்று சொன்னால் தெரியாவதர்களே யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு நடிகர் விஜய் அன்றைய தலைமுறை முதல் இன்றைய தலைமுறை வரை அனைவரையும் தனது நடிப்பால் கட்டு போட்டு உள்ளார். இவரின் சிரிப்பு மற்றும் இவர் செய்யும் சுட்டிதனத்தை ரசிப்பதற்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

நடிகர் விஜய் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் வேற லெவலில் ஹெட் அடித்துள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதையடுத்து, கடந்த ஜூன் 22 ஆம் தேதியின் விஜயின் பிறந்தநாளில் ” நா ரெடி தான் வரவா” பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியானது முதல் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் முதல் இன்ச்டாகிராம் ரீல்ஸ் வரை அனைத்திலும் இந்த பாடல் ட்ரெண்டானது. இந்நிலையில், தளபதி குரலில் வெளியான “நா ரெடி” பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM