Poorana Kozhukattai Recipe in Tamil | பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி? ரொம்ப ஈஸியா செய்யலாம்…

இனிப்பு பூரண கொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு படைக்கப்படும் ஒரு இனிப்பு வகையாகும். இது நமக்கு ஆரோகியத்தை தருவதோடு உடலில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விநாயகருக்கு பிடித்தமான உணவு வகைகளில் கொழுக்கட்டையும் ஒன்றாகும். இந்தியாவில் மக்கள், தேங்காய் பூரண கொழுக்கட்டை, பருப்பு பூரண கொழுக்கட்டை, மோதகம், காரக்கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை என 21 வகையான கொழுக்கட்டைகளை வைத்து விநாயகரை வழிபடுகின்றனர். இதில் அனைவரும் விரும்பி உண்ண கூடிய இனிப்பு பூரண கொழுக்கட்டை எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வருகின்ற விநாயகர் சதுர்த்தியின் போது நீங்களும் இனிப்பு பூரண கொழுக்கட்டை செய்து, இறைவனுக்கு படைத்தும் சுவைத்தும் மகிழுங்கள்.

பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி?

Poorana Kozhukattai Recipe in Tamil

Ganesh Chaturthi 2023

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – 1 கப்
மைதா மாவு (அ) கோதுமை மாவு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – தேவையான அளவு
வெல்லம் – 3/4 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
தண்ணீர் – 1 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
பட்டர் சீட் அல்லது வாழை இலை – 2.

செய்முறை :

  1. ஒரு வாணலியில் 1 கப் பச்சரிசி மாவை எடுத்து, அதை மிதமான சூட்டில் 2 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
  2. 1 1/2 டேபிள் ஸ்பூன் மைதா மாவை 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி எடுத்து கொள்ளவும்.
  3. பின்பு 3/4 கப் வெல்லத்தை 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வாணலியில் ஊற்றவும்.
  4. வெல்லம் தண்ணீரில் கரைந்த பிறகு வாணலியை இறக்கவும்.
  5. மற்றொரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
  6. தேங்காய் நெய்யில் 2 நிமிடம் வதங்கிய பின், அத்துடன் வெல்ல கரைசலை சேர்க்கவும்.
  7. பிறகு, முழுமையாக ஈரம் உலர்ந்த பின் அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.
  8. மறுபடியும் ஒரு வாணலியை எடுத்து, அதில் 1 1/4 கப் தண்ணீர், 1 டீஸ்பூன் நெய், சிறிதளவு உப்பு மற்றும் கலக்கி வைத்த மைதா மாவு
    சேர்த்து, அத்துடன் வறுத்து வைத்த அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விட வேண்டும்.
  9. சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த மாவை பட்டர் சீட்-ன் மேல் உறண்டையாக வைத்து பிரஸ் செய்து, அதில் பூரணத்தை வைத்து மூடவும்.
  10. பிறகு, ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  11. தண்ணீர் கொதித்தவுடன் இட்லி தட்டில், பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை எடுத்து வைத்து இட்லி பாத்திரத்தை மூடவும்.
  12. 7-8 நிமிடம் இட்லி பாத்திரத்தில் உள்ள கொழுகட்டைகளை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  13. இப்பொழுது அனைவரும் விரும்பி உண்ண கூடிய மிகவும் சுவையான இனிப்பு பூரண கொழுக்கட்டை தயார்.