பொங்கல் 2024 பரிசு தொகுப்பு! 3,000 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அண்மையில் உருவான புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் அனைவரும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்கள் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாத சூழ்நிலையில் உள்ளனர் என்றார்.

Pongal 2024 Gift Panneerselvam urges the Tamil Nadu government to increase 3 Thousand rupees

இந்த நிலையில் தமிழக அரசு பத்திரிக்கையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் பொங்கல் பரிசு தொகை பற்றி அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கும் செயலாகும். கடந்த ஆண்டுகளில் 1000 ரூபாய் பொங்கல் தொகுப்பாக வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு எந்த அறிவிப்பும் வெளியிடாது உள்ளது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ : Bharathidasan University Jobs 2024 | பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வேணுமா? அப்போ இந்த ஜாப் உங்களுக்குத்தான்! Apply Now

வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு 3000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென மக்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. பொதுமக்களின் இந்த நியாமான கோரிக்கையை கருத்தில் கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3000 ரூபாய் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கிட நடவடிக்கை வழங்குமாறு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top