Pizza 3 Review: பேய் பழிவாங்குதா? படம் பழிவாங்குதா? ருசியா இருக்குதா இந்த பீட்சா 3…! வாங்க பார்க்கலாம்!

Today Cinema Review 2023

தமிழ் திரையுலகிலே கவனிக்கத்தக்க படங்களில் ஒன்று பீட்சா. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதனைதொடர்ந்து, பீட்சா 2, பீட்சா 3 (த மம்மி) வெளியானது. இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின், பவித்ரா மாரிமுத்து, ரவீனா தஹ நடிக்கும் திகில் திரைப்படம் தான் பீட்சா 3. ஜூலை 28ஆம் தேதி அன்று வெளியானது. முந்தய பீட்சா படத்தை போல அதே தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளதா என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

சென்னையில் புதிதாக ஒரு உணவகத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றார் நலன் (அஸ்வின் காகுமனு). தனது சிறு வயதிலிருந்தே பவித்ரா மாரிமுத்துவைக் காதலிக்கிறார். இவர்களுடைய காதலுக்கு பவித்ராவின் அண்ணன் இன்ஸ்பெக்டரான கவுரவ் நாராயணன் எதிரியாக இருக்கிறார். இந்நிலையில் அஸ்வின் நடத்தும் ரெஸ்டாரண்டில் உரிமையாளர்களுக்கோ பணியாளர்களுக்கோ தெரியாமலே சுவீட் ஒன்று அடிக்கடி செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சுவீட் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வந்தது. ஆனால் அந்த சுவீட்டை செய்தது ஒரு பேய் என அஸ்வின் கண்டறிகிறார்.

இதனையடுத்து, மர்மமான முறையில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. கொலைகளை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? அவர் அந்த பேய்களிடமிருந்து எப்படி தப்பித்தார்? வில்லன்களை பேய் என்ன செய்தது? என்பது தான் பீட்சா 3 படத்தின் கதை.

ரெஸ்டாரண்டில் அஸ்வின் ஒனராக இருந்தாலும் படம் முழுவதும் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறார் என தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க பேய்களிடம் பேசும் மொபைல் ஆப் ஒன்றை தயாரிக்கிறார் பவித்ரா. இதை பார்த்தல் என்னாங்கடா குறளி வித்தையெல்லாம் காட்டுறீங்கனு மாதிரி தான் இருந்தது. தன் காதலியிடமாவது ரெஸ்டாரண்டில் பேய் இருக்கிறது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் படத்தின் இடைவெளி வரைக்குமே அஸ்வின் சொல்லவில்லை. இதில் பவித்ராவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். உணவக ஊழியராக வேலை செய்யும் காளி வெங்கட், அஸ்வினுக்கு ஆறுதல் சொல்லுவது போல நடிப்பிலும் ஆறுதல் தருகிறார்.

இப்படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் வருகிறது. ஒரு அப்பார்ட்மெண்டில் மன வளர்ச்சி குன்றிய சிறுமையை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தழுவி படமாக அமைந்துள்ளது இந்த பீட்சா 3. இதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அபியும், அதனை தட்டி கேட்ட அவருடைய தாயார் அனுபமா குமார் ஆகியோரின் கதாபாத்திரம் நம்முடைய மனதில் நின்று கண் கலங்க வைக்கிறது.

பேய் படம் என்றலே பயமுறுத்தும் வகையில் தான் இருக்க வேண்டும். ஆனால் தமிழ் சினிமாவிலே நாளுக்கு நாள் பேய்கள் பாவப்பட்ட ஜீவன்களாக மாறி வருகிறது. இந்த படம் தொடக்கம் முதல் இறுதி வரை என்ன கதை? என்ன தான் நடக்குது? என படத்தை பார்க்க வந்தவர்களை சுற்ற விட்டிருக்கிறார் இயக்குனர். என்னதான் வழக்கம் போல பழிவாங்கும் கதையாக இருந்தாலும் அதை இன்னும் சுவாரசியமாக மாற்றி இருக்கலாம்.

இப்படத்தில் பேய்களுக்கே உரிய லைட்டிங்கை வித்தியாசமாக அமைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பிரபு ராகவ். பரபரப்பான நிமிடங்களில் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் அருண் ராஜ். இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கிய இந்த படத்தை இன்னும் கொஞ்சம் பரபரப்புடன் நகர்த்தி சுவாரசியத்துடன் இருந்தால் இந்த பீட்சா 3 இன்னும் சுவையாக இருந்திருக்கும்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM