கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்தது. இந்த வைரஸானது பல்வேறு நாடுகளில் பரவி உலக மக்களை அச்சுறுத்தியது. அதன்பின் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து அதனை செலுத்திய பின் தான் கொரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸானது பல லட்சகணக்கான உயிர்களை பழிவாங்கியது. அந்த சோகமே இன்னும் மறையாத சூழலில் தற்பொழுது மீண்டும் ஒரு பெரிய ஆபத்தான நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கர்நாடக மாநிலத்தில் “பிங்க் ஐ” என்ற சொல்லக் கூடிய கண்களின் மூலம் பரவக் கூடிய நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிங்க் ஐ நோய்க்கு கடந்த ஜூலை மாதம் முதல் தற்பொழுது வரை சுமார் 40, 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்களில் தொடர்ந்து வலி, கண் சிவத்தல், கண் அரிப்பு கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுதல் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாக உள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் அதனை அலட்சியமாக நினைக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மட்டுமல்ல மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பிங்க் ஐ கண் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு! பட்டதாரிகள் அனைவரும் அப்ளை பண்ணலாம்…!
- JIPMER புதுச்சேரியில் 10th, 12th, Diploma, M.Sc, MBBS படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 41300 மாச சம்பளமா வாங்கிடலாம்…!
- மாதம் 31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசாங்க வேலை! விருப்பமுள்ளவங்க வாக்-இன் இன்டர்வியூக்கு செல்ல ரெடி ஆகுங்க…!
- UPSC யில் வேலை செய்ய ஆர்வமா இருக்கீங்களா? இந்தியாவில் எந்த பகுதியிலும் வேலை பார்க்கலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!
- IRCON நிறுவனத்தில் மாதம் ரூ.218200 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உங்க ஈமெயில் அட்ரஸ்ல சுலபமா விண்ணப்பிக்கலாம்…!