Pillayarpatti Mothagam Kolukattai Recipe | பிள்ளையார்பட்டி மோதகம் கொழுக்கட்டை செய்யலாமா? – விநாயகர் சதுர்த்தி 2023

பிள்ளையார்பட்டி மோதகம் கொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு படைக்கப்படும் ஒரு இனிப்பு வகையாகும். விநாயகருக்கு பிடித்தமான உணவு வகைகளில் கொழுக்கட்டையும் ஒன்றாகும். பிள்ளையார்பட்டி மோதகம் கொழுக்கட்டை அனைத்து பக்தர்களும், கடவுளுக்கு விரும்பி படைக்க கூடிய ஒரு வகையான உணவு வகை. அதுமட்டுமின்றி, பிள்ளையார்பட்டி மோதகம் கொழுக்கட்டை பக்தர்களுக்கு ஒரு தத்துவத்தை உணர்த்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, கொழுக்கட்டையின் மேற்பகுதி அண்டம் போலவும், உட்பகுதி பிரம்மம் போலவும் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இது உலக வாழ்க்கைப் பற்றற்றுக் கடந்து சென்றால் இனிப்பான கடவுளை அடையலாம் என்ற தத்துவத்தில் அமைந்துள்ளதாக தோன்றுகிறது. இப்படிபட்ட பிள்ளையார்பட்டி மோதகம் கொழுக்கட்டையை வருகின்ற விநாயகர் சதுர்த்தியின் போது நீங்களும் செய்து, இறைவனுக்கு படைத்தும் சுவைத்தும் மகிழுங்கள்.

பிள்ளையார்பட்டி மோதகம் கொழுக்கட்டை செய்யலாமா?

Mothagam Recipe in Tamil

Pillayarpatti Mothagam Kolukattai Recipe

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்
பாசிபருப்பு – 1/4கப்
நெய் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – தேவையான அளவு
வெல்லம் – 1 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்

குறிப்புகள்:

  • கொழுக்கட்டை செய்வதற்கு கடையில் கிடைக்கும் அரிசி மாவு அல்லது வீட்டில் தயாரிக்கபட்ட அரிசி மாவு பயன்படுத்தலாம்.
  • துருவிய தேங்காயை நீர் சேர்க்காமல் அரைத்து சேர்ப்பது, கொழுக்கட்டைக்கு கூடுதல் சுவை தரும்.
  • கொழுக்கட்டையை பிடிக்கும் பொழுது கையில் நெய் அல்லது எண்ணெய் தடவி கொள்ளவும்.

செய்முறை:

  1. ஒரு கப் பச்சரிசி மற்றும் 1/4 கப் பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  2. ஊற வைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒரு துணியில் போட்டு உலர வைக்க வேண்டும்.
  3. ஈரம் உலர்ந்த பிறகு, அவற்றை கொரகொரவென அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  4. பிறகு ஒரு கடாயில் அரைத்த மாவை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. அரிசி மாவு உதிரியாக வந்த பிறகு, கொதிக்க வைத்த நீரை சேர்த்து கொள்ள வேண்டும்.
  6. இந்த நீரில் அரிசி மாவை நன்கு வேக வைக்க வேண்டும்.
  7. மற்றொரு பத்திரத்தில் 1 கப் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரைந்தவுடன் அதை எடுத்து கொள்ளவும்.
  8. வெல்ல கரைசலை, வெந்த அரிசி மாவில் சேர்த்து மிதமான சூட்டில் கிளற வேண்டும்.
  9. பிறகு, அதை ஆற வைக்க வேண்டும்.
  10. 1 கப் துருவிய தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  11. அரைத்த தேங்காய், ஏலக்காய் மற்றும் நெய் ஆகியவற்றை ஆற வைத்த அரிசி கலவையில் சேர்த்து கிளற வேண்டும்.
  12. பிறகு, அவற்றை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  13. ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  14. தண்ணீர் கொதித்தவுடன் இட்லி தட்டில், பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை எடுத்து வைத்து இட்லி பாத்திரத்தை மூடவும்.
  15. 7-8 நிமிடம் இட்லி பாத்திரத்தில் உள்ள கொழுகட்டைகளை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  16. இப்பொழுது அனைவரும் விரும்பி உண்ண கூடிய மிகவும் சுவையான பிள்ளையார்பட்டி மோதகம் கொழுக்கட்டை தயார்.