மக்களே உஷாரா இருங்க… தமிழகத்துல இந்த காய்ச்சல் வேகமாக பரவுதாம்..! மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்!!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகமே கொரோனா வைரஸை கண்டு அஞ்சியது. ஏனென்றால் இந்த கொரோனா வைரஸ் சிறியவர்கள், பெரியவர்கள் என யாரையும் பாகுபாடு பார்க்காமல் பரவியது. இந்த கொரோனா வைரஸ்க்கு உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். அதன்பிறகு ஆராய்ச்சியாளர்களால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு சிறிது சிறிதாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையாத பட்சத்தில் தமிழகத்தில் தற்பொழுது டைபாய்டு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தள்ளனர். காலைநிலை மாற்றம் காரணமாக அதிகமான வெயில், பருவம் தவறிய பெய்யும் மழை காரணமாக தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தற்பொழுது டைபாய்டு காய்ச்சலும் வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தள்ளனர்.

தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர் காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் தினந்தோறும் அதிக அளவிலான் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், டைபாய்டு காய்ச்சலானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது என்பதால் பொதுமக்கள் வெளி உணவுகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல், குடிக்கும் தண்ணீரை நன்றாக சூடுபடுத்தி குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM