பாட்னர் மூவி ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு! எப்பனு தெரியுமா…!

இன்றைய சினமா செய்திகள் 2023

Indraiya Cinema Seithikal 2023: இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாட்னர்’. இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஷபீர் அகமது சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படமானது வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது. இதற்க்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM