சுவையான பாலக்கீரை பக்கோடா செய்வது எப்படி? Palak Keerai Pakoda Recipe in Tamil

0
75

பாலக்கீரையை வைத்து பக்கோடா செய்ய நீங்க ரெடியா? ஆம். பாலக்கீரை பக்கோடா தான். பொதுவாகவே, பாலக்கீரையில் பெரும்பாலான நன்மை தரும் சத்துக்கள் உள்ளன. இந்த பாலக் கீரை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க உதவுவதால், பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

மேலும், புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இந்த பாலக்கீரைக்கு உள்ளது. இரத்த சிவப்பு அணுக்களை பாலக்கீரை அதிகமாக உற்பத்தி செய்வதால், அனிமீயா என்ற நோயை வராமல் தடுக்க உதவுகிறது. இது போன்ற பற்பல நன்மைகளை இந்த பாலக்கீரை கொண்டுள்ளது.

இதனை குழந்தைகளுக்கு செய்து கொடுத்து பாருங்கள்… அதன் பின்னர், அவர்களே கேட்டு அடம்பிடிப்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவையும், மொருமொருப்பு தன்மையும் இருக்கும். இதோ பாலக்கீரை பக்கோடாவிற்கான செய்முறை உங்களுக்காக…

பாலக்கீரை பக்கோடா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 1 கப்
  • நறுக்கிய பாலக் கீரை – 1 கப்
  • பெருங்காயத்தூள் – 1/2 (அரை) டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தூள் – 1/2 (அரை) டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • வெங்காயம் – 1
  • அரிசி மாவு – 1/2 (அரை) கப்
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகாய் தூள் – 1/2 (அரை) டேபிள் ஸ்பூன்

செய்முறை:

STEP 1

முதலில் பாலக்கீரை நன்கு தண்ணீரில் அலசிய பிறகு, அதனை ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

STEP 2

அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தூள் வகைகள், அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, சிறிது தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

STEP 3

அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி சூடேறியதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது சிறிதாக பக்கோடா போல எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்வளவுதான்! இப்போது சூடான, சுவையான, ஆரோக்கியமான பாலக்கீரை பக்கோடா தயார்!


RECENT POSTS IN VALAIYITHAL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here