விஜய் டிவியில் ஒளி பரப்பாகக்கூடிய, “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த வார எபிசோடை பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில்…
பாக்கியா: அந்த தொழிலதிபரிடம் தான் வாங்கியுள்ள சமையல் ஆர்டர், கோபி ராதிகா திருமணத்திற்காக தான் என்பதை அறிந்து, கோபியை சந்திக்க பாக்கியா செல்கிறாள். அதன் பிறகு, கோபி பாக்கியா சொன்னதைக் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் எபிசோடுகளும் இனி வரவிருக்கும் வாரத்தில் தொடர உள்ளது.
பாக்கியலட்சுமி:
இந்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இதனால், இனி வரக்கூடிய வாரத்தில் நடக்கவிருக்கும் அதிரடி திருப்பங்களை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த சீரியலில் தற்போது, ராதிகா கோபி திருமண ஏற்பாடுகள் தான் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சந்துரு தனது தங்கையான ராதிகாவின் திருமணத்தை கோபியுடன் சிறப்பாக நடத்த வேண்டுமென்று நினைக்கவே, ரசிகர்களோ காலம் போன காலத்தில் இதெல்லாம் தேவையா என்ற கடுப்பில் இருக்கின்றனர். மறுபக்கம் பார்த்தால், பாக்கியாவோ இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனது தொழிலில் மாஸாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பாக்கியாவிற்கு ஒரு பெரிய சமையல் ஆர்டர் கிடைக்கவே, அதனை சிறப்பாக செய்து தொழிலில் மேலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் பாக்கியா இருக்கிறாள். இந்த நிலையில் தான், பாக்கியாவிற்கு, தனக்கு கிடைத்த சமையல் ஆர்டர் ராதிகா கோபி திருமணத்துக்கான சமையல் ஆர்டர் என்பது தெரிய வருகிறது. அதனால், பாக்கியா கோபியை பார்க்க செல்கிறாள்.
உங்கள் திருமணத்தின் சமையல் ஆர்டர் தனக்கு தான் கிடைத்ததுள்ளது என்று கூறி, திருமணத்தை பற்றி பேசுகிறாள். கோபியும் ‘ஆமாம்! நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன், நீ என்னதான் செய்தாலும் எனது திருமணத்தை தடுக்க முடியாது’ என்று பாக்கியாவிடம் சொல்கிறார்.
அதற்கு கோபியிடம் பாக்கியா, ‘நானும் அதையே தான் சொல்ல வந்தேன். திருமணத்தை நிறுத்திவிடாதீர்கள்… ஏனென்றால், உங்களுக்கும் ராதிகாவிற்கும் நடக்கவிருக்கும் திருமணதிற்கு நான் தான் சமைக்க போகிறேன். இது எனது தொழிலுக்கு கிடைத்த மிகப்பெரிய வாப்பாக நான் பார்க்கிறேன்.
ஆதலால், நான் இந்த திருமணத்தில் மிகவும் சிறப்பாக சமையலை செய்து முடிக்க விரும்புகிறேன்’ என்று சொல்கிறாள். இவ்வாறு பாக்கியா பேசியதை பார்த்து, கோபிக்கு கோபம் வருகிறது. எவ்வளவு திமிரு இவளுக்கு என்று கோபி பாக்கியாவை பற்றி நினைக்கிறார். இது எல்லாம் இனி வரவிருக்கும் வார எபிசோட்டில் காட்டப்பட உள்ளது.