நம்ம சென்னையில மிதக்கும் ஹோட்டலா… இதுல இவ்வளோ சிறப்பம்சம் இருக்கா… வெளியான அசத்தல் அப்டேட்!!

முன்னதாக மெட்ராஸ் என்று சொல்லப்பட்ட சென்னை மாநகரம் இன்று ஒட்டுமொத்த தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த அளவிற்கு கட்டிடங்களும் ஹோட்டல்களும் நிறைந்து காணப்பட்டு வருகிறது. இப்போதெல்லாம் நாம் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் பொதுமக்களை கவரும் வகையில் ஒரு ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஒவ்வொரு உணவகமும் மற்ற உணவகங்களுடன் தங்கள் உணவகம் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டு புதுவித வடிவில் வடிவமைத்து வருகின்றனர். அதேபோல், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாகவே இங்கு கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் சுமார் 2000 சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

Our floating hotel in Chennai Is it so special Amazing update released read now

இதையடுத்து, படகு இல்லத்திற்கு வரும் பயணிக பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் ஐந்து கோடி மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் 125 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த உணவகம் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே உணவை உண்ணக்கூடிய வகையில் தயார் செய்யப்படும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM