இந்த மாதிரி வாய்ப்புகள் நிறைய கிடைக்காது! 7வது இடத்தில் களமிறங்கியது ஏன்? ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம்…!

Today Sports News in Tamil 2023

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவரில் 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

நேற்றைய தினத்தில் நடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பல மாற்றங்களை கேப்டன் ரோகித் சர்மா மேற்கொண்டார். இந்த போட்டியில் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தனது இடத்தை இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் விட்டுக் கொடுத்துவிட்டு அதன் பின்னரும் சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூரும் ஆகியோரை ஆட்டத்தில் களமிறக்கி விட்டு ஏழாவது வீரராக கேப்டன் ரோகித் சர்மாவும்
களம் இறங்கி விளையாடியிருந்தார்.

இது தொடர்பாக போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா அளித்த பேட்டியில் பேசியதாவது…

இந்த போட்டியில் முதலாவது பந்து வீசி அதன் இலக்கு என்ன என்பதை தெரிந்துகொள்ள நினைத்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என மூவருக்குமே ஆடுகளம் சாதகமாகதான் இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை இவ்வளவு குறைந்த ரன்களில் நாங்கள் வீழ்த்துவோம் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.

எங்களுடைய அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் நன்றாக விளையாடி குறைவான ரன்களை கட்டுப்படுத்தினார்கள். ஆகவே என்னுடைய பேட்டிங் வரிசையை மாற்றி அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு வாய்ப்பினை கொடுத்து ஆட்டத்தை பரிசோதித்து பார்க்கலாம் என முன்கூட்டியே அனைவரையும் களமிறக்கி விட்டேன். ஏனென்றால் இதுபோன்ற வாய்ப்புகள் ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய கிடைக்காது.

மேலும், நான் என்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்கினேன். அதன் பிறகு இப்போதுதான் ஏழாவது இடத்தில் விளையாடினேன்.

முகேஷ் குமார் முதல் போட்டியின் போது நன்றாகவே பந்து வீசினார். டெஸ்ட் போட்டியிலும் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். இதனையடுத்து, இசான் கிஷனுடைய பேட்டிங்கும் நல்ல முறையில் இருந்தது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்தான். மேலும், பந்துவீச்சாளர்கள் எல்லோரும் சிறப்பாக விளையாடியதால் தான் இந்த போட்டியில் வெற்றி கிடைத்தது என இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM