ஒரே ஒரு வீடியோதான் 10 லட்சம் பாலோயர்கள்… இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும் நயன்தாராவின் வீடியோ..!

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக வாய்ப்பு மற்றும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வரும் ஒரே ஒரு பெண்மணி என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவ்வளவு சிறப்பை பெற்றிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதிலித்து வந்தார். அதன்பின், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Only one video has 10 lakh followers Nayanthara video is trending on Instagram read it now

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன நான்கே மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். அதன்பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் பண்டிகை போன்ற முக்கிய நாட்களில் தனது மனைவி நயன்தாரா மற்றும் இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். அப்பொழுது கூட இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டமாட்டார்கள்.

Also Read : பல ஆண்டுகளுக்கு பிற ஜோடி சேரப்போகும் விஜய்-சிம்ரன் காம்போ..! எந்த படத்தில் தெரியுமா?

ஆனால், நடிகை நயன்தார தனது குடும்பம் மற்றும் தனிப்பட்ட விசியங்களை எந்தவொரு சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்வதில்லை. அவர் எந்தவொரு சமூக ஊடகங்களையும் பயன்படுத்துவதில்லை. முதல் முறையாக நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரில் புதிய கணக்கு ஒன்றை நேற்று துவங்கினார். அதில், தனது இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட வீடியோவை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோவிற்கு ஆயிரக்கணக்கான லைக்குகளுடன், பாலோயர்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் கணக்குத் துவங்கிய 10 மணிநேரத்தில் சுமார் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் பாலோயர்களைப் பெற்றுள்ளார் நயன்தாரா.