ஆம்னி பேருந்து சேவைகள் ரத்து..! தென் மாவட்டங்களில் கனமழை…

ஆம்னி பேருந்து சேவைகள் ரத்து..! தென் மாவட்டங்களில் கனமழை...

குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. வானிலை மையம் அறிவித்தப்படியே இந்த நான்கு மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவுகளில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் வெள்ளநீர் ஆங்கங்கே தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் மீண்டும் தென்மாவட்டங்களின் இந்த ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ : அப்ளிகேஷனுக்கு பீஸ் குடுக்க வேண்டாம்! டைரக்ட்டா நேர்காணலுக்கு போங்க… அழகப்பா பல்கலைக்கழக வேலையில சேருங்க..!

இது குறித்து ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்கள் கூறுகையில், தென் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பேருந்து அங்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்றனர். மேலும் வெள்ளப்பாதிப்பு அதிகம் உள்ள இடத்திற்கு பேருந்துகளை இயக்குவது பாதுகாப்பானது இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எனவே மழை வெள்ளம் அனைத்தும் குறைந்த பிறகு வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களுக்கும் தினசரி 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. எனவே வெள்ளம் காரணமாக தற்காலிகமாக பேருந்துகள் ரத்து செய்யப்படுகின்றன.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top