தமிழகத்தில் உயர்த்தப்பட்ட முதியோர் ஒய்வூதியம்…! இந்த மாதம் முதல் அமல்! தமிழக அரசின் புதிய அரசாணை!!

Old age pension increased in Tamil Nadu Effective from this month! New Ordinance of Tamil Nadu Govt see here

தமிழகத்தில் முதியோருக்கு ஒய்வூதியமாக மாதம் ரூ.1000 அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டத்தின் கீழ் விதவையர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்பொழுது இந்த முதியோர் ஒய்வூதியத் தொகை மாதம் 1000 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்த உள்ளதாக தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, உயர்த்தப்பட்ட ஒய்வூதியத் தொகையானது ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, ஒய்வூதியத் தொகை உய்ர்த்தி வழங்கப்பட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு 845.91 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாதம் ரூ.1000 ஒய்வூதியம் பெற்று வந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM