அட இந்த காம்போவ பாக்கத்தான் நாங்களும் வெயிட் பன்றோம்! வைரலாகும் ஜெயிலர் போஸ்டர்…!

Today Cinema News 2023

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் மலையாள நடிகரான மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் ஜெயிலர் படத்தின் பாடல்களும், ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மோகன்லாலும் ரஜினியும் நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இணையத்திலே இந்த போஸ்டர் வைரலாகி லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. மேலும் இந்த காம்போவ பாக்கதான் காத்திருக்கோம் என்று ரசிகர்ள் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM