TNRD துறையில் அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிக்கு ஆட்கள் தேவை! எட்டாவது படிச்சவங்க விண்ணப்பிக்கலாம்!

TNRD Dharmapuri Recruitment 2024 Notification Released

TNRD Dharmapuri Recruitment 2024

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 02 அலுவலக உதவியாளர் / இரவு காவலர் (Office Assistant, Night Watchman) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 to ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. TNRD Jobs 2024-க்கு விண்ணப்பிக்கும் விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இரவு காவலர் பணியிடத்திற்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://dharmapuri.nic.in/ இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

Also Read >> கபாலீஸ்வரர் கோயில்ல டிரைவர், ஆபீஸ் அசிஸ்டன்ட், லைப்ரரின், உதவி மின் பணியாளர் வேலை! 10th, 8th, B.Sc, ITI படிச்சிருந்தா விண்ணப்பிக்கலாம்!

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 03.01.2024 முதல் 11.1.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேலும் விவரங்களை அறிய TNRD Notification லிங்கை கிளிக் பண்ணவும்.

விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்ய TNRD Application Form ஐ கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top