உலகை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து..! இதுவரை அடையாளம் காணப்படதா 29 சடலங்கள்!!

கடந்த ஜூன்  மாதம் 2 ஆம் தேதியில்  ஒடிசா மாநிலத்தில் உலகையே உலுக்கிய ஒரு ரயில் விபத்து நடந்தது. அதில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சுமார் 295 பேர் பலியாகியது மட்டுமல்லாமல் 1,200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசா ரயில் விபத்து பற்றி தற்பொழுது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ரயில் விபத்தில் 29 பேரின்  சடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தசடலங்கள் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கபட்டு உள்ளது.

Odisha train accident that shook the world 29 dead bodies have not been identified yet see here

இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய ஆய்வகத்தில் அடையாளம் காணப்படாத 29 சடலங்கலின் மரபுஅனு மாதிரிகள்  அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் மரபணு முடிவின் அடிப்படையில்   இந்த சடலங்ககள் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படும் என்று எய்ம்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM