கர்ப்பக் காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்கள்!

0
125

கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான, ஊட்டசத்துமிக்க உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வது அவசியம். இது அவர்களுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் மிகவும் நல்லதாகும். மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவு பொருட்களை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் பெண்கள் உணவில் அதிக கவனமாக இருப்பது மிகவும் நல்லதாகும். ஏனெனில், அப்போது தான் அவர்களுக்கு பசி என்பது அதிகமாக எடுக்கும். தற்போது அவருடன் சேர்த்து ஒரு உயிருக்கு பதிலாக இரண்டு உயிர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதால், தினசரி உட்கொள்ளும் உணவில் ஒரு சில நல்ல மாற்றங்களை மேற்கொள்வது அவசியம்.

கருவுற்ற போது மிகுந்த ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்கள், பழங்கள், காய்கறிகள், கீரைகள், அசைவ உணவுகள் போன்றவற்றை சற்று அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம், உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கிடைக்க செய்ய முடியும். இதனால், உடலும் வலிமையாக இருக்கும்.

கருவுற்ற முதல் மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும் மாதம் வரை குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தில் எந்த விதமான குறைபாடும் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது உங்களுக்கும் உங்களின் குழந்தையின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானதாகும்.

குழந்தையின் உடலுக்கு தேவையான உணவில் எந்த விதமான பாகுபாடும் காட்டக்கூடாது. அதேபோல் உணவை உண்ணாமலோ அல்லது ஒரே நேரத்தில் அதிகப்படியாக உண்பதையோ தவிர்த்து, சிறிது இடைவெளி விட்டு விட்டு உணவை எடுத்து கொள்ள வேண்டும். இதுவே கர்ப்பிணி பெண்களுக்கு நன்மையை தரும்.

1. இயற்கை(ஆர்கானிக்) உணவுகள்:

இயற்கை(ஆர்கானிக்) உணவுகள்
organic foods

சாதாரணமாகவே இயற்கை உணவுகள் நம்மை எப்போதும் சரியான உடல்நிலையுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருவுற்ற போது, பெண்கள் இயற்கையாக விளைந்த எந்தொரு உணவாக இருந்தாலும் எடுத்து கொள்ளலாம். இந்த உணவுகள் உடலை பலப்படுத்தும். அது உடலுக்கு எந்த விதமான தீங்கையும் தராது.

உதாரணமாக, கீரையை எடுத்துக் கொண்டால் இதில் உள்ள சத்துக்கள் ஏராளம். கீரையை நன்கு வேக வைத்து குழம்பாகவோ, பொரியலாகவோ, சூப்பாகவோ அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். மேலும், காய்கறிகளையும் கூட சூப் வைத்து குடித்து வரலாம். உணவில் சேர்க்கக் கூடிய கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை கொண்டே எளிதில் காய்கறி சூப்பை செய்து விடலாம்.

பழங்களை பொறுத்த வரை நன்கு இயற்கை முறையில் விளைந்த இரசாயனமில்லாத பழங்களையே உண்பது நல்லது. நீங்கள் பெரும்பாலும் பழங்களை ஜுஸாக எடுத்துக் கொள்ளாமல், வாயில் அரைத்து உண்பதே சிறந்தது. இதனால், அதன் முழுப்பயனை நம்மால் பெற முடியும். இது பல்லுக்கும் ஒரு வலிமையை கொடுக்கும்.

2. தானியங்களும் சிறந்தவை:

seeds

தானியங்களை அன்றாட உணவில் சேர்த்து வருவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் உடலுக்கு போதுமான அளவு மிகுந்த சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. தானியங்களை ஒன்றாக அரைத்து சத்துமாவாகவும் பயன்படுத்தலாம்.

இது கர்ப்ப காலத்தில் ஊட்டசத்து இன்மையை சரிப்படுத்தி, குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மூன்று தானியங்கள் வரை ஒரே நேரத்தில் வேக வைத்து உணவில் எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக ஊற வைத்து முளைக்கட்டிய பச்சைப் பயிறு, சுண்டல் போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக கம்பு, சோளம், கோதுமை, மக்காசோளம், அரிசி, கேழ்வரகு போன்ற தானிய மற்றும் தினை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கர்ப்பிணி பெண்கள் தினமும் பேரிச்சை, முந்திரி, பாதாம் உள்ளிட்டவற்றை அரைத்து ட்ரை ப்ரூட் சாறும் எடுத்து கொள்ளலாம். இது உங்களை புத்துணர்ச்சியாக வைக்கும்.

3. கர்ப்பிணி பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை:

junk foods

பேக்கரி சார்ந்த இனிப்பு வகைகள் மட்டுமல்லாது, கடைகளில் வாங்கும் பழக்கத்தையும் தவிர்த்து விடுவது நல்லது. இது உடலுக்கு கேடு தரக் கூடியதாகும். மேலும், கர்ப்பக் காலத்தில் இதனை எடுத்துகொண்டால், உடல் நலத்தை நிச்சயமாக பாதித்து, குழந்தையின் வளர்ச்சியில் சிக்கலை ஏற்படுத்திடும்.

பல்வேறு கிரீம் உணவுகள் சுவையூட்டி நிரம்பியதாகவே இருக்கும். இதனை உண்ணும் பொழுது தேவையற்ற உபாதைகள் உடலுக்கு வரக்கூடும். இவ்வாறு உடலுக்கு தீங்கை தரக் கூடிய உணவுபொருட்களை முற்றிலுமாக தவிர்த்து விடுவது கர்ப்ப காலத்தில் மட்டுமல்லாது, சாதாரண வாழ்விற்கும் நல்லது.

ஏனென்றால், கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதால், இது போன்ற உடல் நலத்தை பாதிக்கக் கூடிய உணவுகளை உட்கொண்டால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும். செயற்கையான முறையில், தீங்கு தரக்கூடிய உணவு பொருளுக்கும் பானங்களுக்கும் பழகி கொள்வதை எப்பொழுதும் தவிர்த்து விடுங்கள்.

4. அசைவ உணவுகளின் தாக்கம்:

meat foods

கருவுற்ற காலத்தில் சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது போலவே ஆரோக்கியமுள்ள அசைவ உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு தேவையான புரதச் சத்துக்களை அதிக அளவில் பெற்றுள்ளதால், மாமிசம் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லதாகும்.

இருப்பினும் அதை மட்டுமே அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், இது செரிப்பதற்கு அதிகப்படியான ஆற்றலை எடுத்துக் கொள்ளும் என்பதால் கருவுற்ற காலத்தில் உங்களுக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் அசெளகரியங்களை ஏற்படுத்திடக் கூடும். அசைவ உணவுகள் செரிக்கவில்லை என்றால், வாந்தி போன்றவை வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

அமிர்தமே ஆனாலும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல உடலின் தன்மையை நன்கு அறிந்து அதற்கேற்ப அசைவ உணவுகளை அளவாக எடுத்து கொள்வது நல்லதாகும். மேலும், குழந்தையின் உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மிகவும் அவசியமானது.

5. மூலிகை தேநீர் பருகுவது நல்லது:

tea

புதினா, கொத்தமல்லி போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு வைக்கப்படும் தேநீரை அருந்துவது நன்மையை தரும். மேலும் கர்ப்பக் காலத்தில் இஞ்சி, சுக்கு போன்றவைகளை கொண்டு வைக்கப்படும் தேநீரை சற்று குறைவாக எடுத்து கொள்வது நல்லது.

ஏனெனில், இவை இயற்கையானது என்றாலும் கூட உடல் வெப்பத்தை அதிகரித்திடக் கூடும். இது கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திடும். எனவே, குறைவான அளவில் தேநீர் அருந்துவது நல்லது. இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தேநீரை பருகுவது, செரிமானத்தில் இடையூறை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

மேலும் இவை வாயு தொந்தரவையும் உண்டாக்கும். ஏனெனில், தேநீரில் இருக்கக்கூடிய டையூரிடிக் சேர்மம் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுக்கும். இதனால் உடலில் நீரிழப்பு அதிகமாக உண்டாகக் கூடும். எனவே, வெறும் வயிற்றில் தேநீர் பருகுவதை தவிருங்கள்.

6. அதிக உப்புள்ள உணவு வகைகள்:

salts

கர்ப்பக் காலத்தில் உப்பு நிறைந்த உணவு எதுவாக இருந்தாலும், எடுத்துக் கொள்வதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். இது, உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணமாகக் கூடும். பொதுவாக வீட்டில் செய்யும் உணவு வகைகள் மட்டுமே நல்ல சுகாதாரமான, சத்துள்ளதாக அமையும்.

கடைகளில் வாசனைக்காக அல்லது கலருக்காக அல்லது சுவைக்காக என்று பலவிதமான சுவையூட்டிகளை பயன்படுத்துவார்கள். இது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எண்ணெயில் வறுத்த அல்லது பொறித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உதாரணமாக ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், வடகம், சிப்ஸ், சாஸ், பாப்கான், பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என அனைத்துமே உப்பு நிறைந்த உணவுகள்தான். இது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாமல் இதனை உண்பவர்களுக்கும் உடல் நல பிரச்சனைகளை வரவழைக்கும்.

7. பச்சை காய்கறியும் பச்சை நிற உணவுகளும்:

green vegitables

கர்ப்பக் காலத்தில் அதிகமாக பச்சை காய்கறிகளை பயன்படுத்துவது மிகுந்த பயனை அளிக்கும். அரிசி, மைதா, கோதுமை போன்றவற்றில் உண்ணக் கூடிய உணவு வகைகளை குறைத்துக் கொண்டு, பச்சை காய்கறிகளில் கேரட், பீட்ருட், வெண்டைக்காய் போன்றவைகளை அப்படியே கழுவி விட்டு உண்ணலாம்.

இது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடியதாகும். மேலும் பச்சை உணவில் பீன்ஸ், தானியங்கள், கடற்பாசி, பழங்கள், விதைகள், நட்ஸ் வகைகள் மற்றும் பதப்படுத்தப் படாத இயற்கை(ஆர்கானிக்) உணவுகள், காய்கறிகள், உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்பு வகைகளும் அடங்கும்.

இவையெல்லாம் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் போதுமான வைட்டமின்களையும், புரதங்களையும் தரக் கூடியதாகும். பச்சை நிறத்தில் இருக்கக் கூடிய முளைக்கீரை, கிவி பழம், திராட்சை போன்றவற்றிலும் அதிக சத்துக்கள் உள்ளது. இதனை கர்ப்பக் காலத்தில் பயன்படுத்துவது சிறப்பான பயனைத் தரும்.


RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here