இனிமே வாட்ஸ் அப்ல மட்டுமல்ல டுவிட்டர்லையும் வீடியோ கால் பேசலாம்..! சற்றுமுன் வெளியான அசத்தல் அப்டேட்!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வந்தார். முதலில் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்தார். அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மட்டுமே வைத்திருந்த ப்ளூ டிக் வசதிக்கு கட்டணத்தை அறிவித்தார்.

மேலும், குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் வசதியை பெறலாம் என்றும் அறிவித்தார். அதன்பின், சமீபத்தில் டுவிட்டரின் லோகாவை “X” என்று மாற்றினார். இந்நிலையில், டுவிட்டரில் தற்பொழுது மீண்டும் ஒரு புதிய அப்டேட் ஒன்றை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.

அதன்படி, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு போட்டியாக தற்பொழுது டுவிட்டரிலும் வீடியோ கால் பேசும்படியான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சமானது கூடிய விரைவில் அனைத்து பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM