நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வங்கிகளில் பணிப்புரியும் ஊழியர்கள் அனைவரும் பணிச்சுமை காரணமாக அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, அனைத்து வங்கிகளும் வாரத்தின் 5 நாட்கள் மட்டுமே வேலை நாளாகவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஐபிஎம் ஆனது மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு இந்த பரிசீலனையை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சனிக்கிழமை வேலை நாளை ஈடுசெய்யும் விதமாக வங்கிகளின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்பாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- மத்திய அரசு சூப்பரான வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது! மாதம் ரூ.1,00,000/- சம்பளம்!
- BECIL லிமிடெட்டில் புதியதோர் பணியிடங்கள் அறிவிப்பு! தாமதிகாமல் உடனே அப்ளை பண்ணுங்க!
- Diploma படித்திருந்தால் போதும் CMC வேலூர் கல்லூரியில் வேலை செய்யலாம்!
- UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் புதிய வேலை அறிவித்துள்ளது! விண்ணபிக்க மறக்காதீங்க!
- மாதத்திற்கு ரூ.60,000 முதல் ரூ.85,000 வரை சம்பளம் தராங்க! ESIC கழகத்தில் வேலை!